"தாயுள்ளத்துடன் அறிவுறுத்தினேன்... உள்நோக்கத்துடன் அணுகாதீர்கள்"- அமைச்சர் ஜெகதீஸ்வரி

 
“இதற்கு முதல்வரும் சப்போர்ட் செய்ய மாட்டார்! யாராக இருந்தாலும் தண்டனைதான்”- அமைச்சர் ஜெகதீஸ்வரி

மாணவர்கள் முடிவெட்டுவது குறித்து தான் பேசியது பேசுபொருளானதை தொடர்ந்து அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (02.11.2026) திருச்சுழி, காரியாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அயன் ரெட்டியாபட்டி தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய போது, மாணவர்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டிக்கொண்டு நேர்த்தியான தோற்றத்துடன் பள்ளிக்கு வர வேண்டும் என்று தாயுள்ளத்தோடு அறிவுறுத்தினேன். பள்ளிக்கூடம் என்பது கல்வியை மட்டுமல்ல, ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுத்தரும் இடமாகும். பள்ளிகளுக்கென வகுக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளை மாணவர்கள் பின்பற்றி, ஒழுக்கத்துடன் வளர்ந்து சிறந்த குடிமக்களாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலேயே அவ்வாறு பேசினேன்.  மாணவர்கள் மீதான தாயுள்ளத்தையும், அவர்களின் ஒழுக்கமான வளர்ச்சிக்கான உண்மையான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.  மாணவர்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டிக்கொண்டு நேர்த்தியான தோற்றத்துடன் பள்ளிக்கு வர வேண்டும் என்று தாயுள்ளத்துடன் அறிவுறுத்தினேன். பள்ளிகளுக்கென வகுக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளை மாணவர்கள் பின்பற்றி சிறந்த குடிமக்களாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலேயே பேசினேன்; இதனை உள்நோக்கத்துடன் அணுகாமல், அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.