“இதற்கு முதல்வரும் சப்போர்ட் செய்ய மாட்டார்! யாராக இருந்தாலும் தண்டனைதான்”- அமைச்சர் ஜெகதீஸ்வரி
விருதுநகரில் நடைபெற்ற சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கும் விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். அப்போது அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்கண்காணிப்பாளருக்கு அவர் ஒரு முக்கிய கோரிக்கை வைத்தார்.

அதன்படி, “எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது புகார் வந்தால், தயவு செய்து உண்மைத்தன்மையை அறிந்து அதனை பின்பற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். பொய்யான புகார்கள் உருவாக்கப்பட்டு எங்கள் மீது களங்கம் கற்பிக்கப்படுகிறது. அனைத்து இடத்திலும் பொய் பிரச்சாரங்களையும் அவதூறுகளையும் மட்டுமே எதிர்க்கட்சியினர் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆராய்ந்து பார்த்து அறிந்து அதன் பின்பு நடவடிக்கை எடுங்கள். தவறு செய்தால் எங்கள் நிர்வாகியாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார். யாராக இருந்தாலும் தண்டனைதான். இதைத்தான் எங்கள் முதல்வர் செய்துகொண்டிருக்கிறார். அதற்காக அவர்களுக்கு நாங்கள் ஒருபோதும் சப்போர்ட் செய்ய மாட்டோம். நம்முடைய முதல்வரும் சப்போர்ட் செய்ய மாட்டார்” என்றார்.

