வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு

 
periyasamy

வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். 

I Periyasamy

கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேட்டில்  ஈடுபட்டதாக வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி மீது அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  ஐ. பெரியசாமியை சென்னை எம்.பி., மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது . இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.அத்துடன் ஐ பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அவர் உத்தரவிட்டார்.

supreme court

இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.ஐ.பெரியசாமியை சிறப்பு நீதிமன்றம் விடுவித்த நிலையில், வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆணை பிறப்பித்திருந்தார்.