திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை- அமைச்சர் பெரியசாமி

 
periyasamy periyasamy

திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது  தனிப்பட்ட முறையில் ஆட்சி தான் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்.

ED raids across two cities over reopened case against Tamil Nadu minister,  DMK says bid to deflect from 'vote chori' | India News - The Indian Express


திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் மு க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என பேசி வருவது குறித்த கேள்விக்கு, கேட்பது அவர்களது உரிமை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதுமே கிடையாது தனிப்பட்ட முறையில் ஆட்சி தான் கூட்டணி ஆட்சி எல்லாம் இருக்காது அதில் முதல்வர் உறுதியாக உள்ளார். 

சென்சார் போர்டு ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக முதல்வர் குற்றச்சாட்டு வைத்துள்ளது குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் சொல்வது உண்மைதான் சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. முன்னதாக தைத்திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிவிக்க உள்ளார் என பேசினார்