ரூ.3 லட்சம் காசோலையை பெற்றோரிடம் வழங்கிய அமைச்சர்- அடுத்த நொடியே தூக்கி எறிந்த உறவினர்கள்
விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு ஆறுதல் கூறி விட்டு 3 லட்ச ரூபாய் நிதிக்கான காசோலையை பெற்றோரிடம் அமைச்சர் வழங்கி விட்டு சென்ற அடுத்த நொடியே உறவினர்கள் அதனை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார் இது தொடர்பாக அவரின் பெற்றோர் பழனிவேல் சந்தேகமரனமாக உள்ளதாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல், ஆகிய மூவரையும் நள்ளிரவு கைது செய்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்தனர். அதன் பின்னர் குற்றவாளிகள் மூவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் குழந்தையின் உடல் இன்று காலை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை காலை செய்யப்பட்டு உடல் பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. வீட்டில் வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தையின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். அதன் பின்பு குழந்தையின் பெறோரிடத்தில் முதலமைச்சர் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அப்போது குழந்தையின் தாயார் காசோலையை வாங்க மறுத்து கதறி அழுததால் அதனை குழந்தையிம் தாத்தா பெற்று கொண்டு குழந்தையின் தாயாரிடம் ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் அறிவித்த 3 லட்சம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கபட்டுள்ளதாகவும் இதில் சிறப்பு கவனம் மாவட்ட ஆட்சியர் செலுத்தி வருவதாகவும் பள்ளி நிர்வாகம் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி பட தெரிவித்தார்.