பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகிறார்கள் - அமைச்சர் கீதா ஜீவன்!
Mar 8, 2025, 14:15 IST1741423503048

பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகிறார்கள் என தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெண்கள் பாதுகாப்புக்கு எதிரான ஆட்சி என பச்சை பொய் கூறுகிறார்கள். மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள். தமிழகத்தில் மகளிர் காவல் நிலையம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதிக்கப்படும் போது தைரியமாக புகார் அளிக்கிறார்கள், உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகிறார்கள் என கூறினார்.