இடமாற்ற ஊழல் பின்னணியில் அமைச்சரின் மாமனார்? விசிக பரபரப்பு புகார்

 
s

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல் நடந்திருப்பதாக விசிக புகார் கூறியுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவின் மாமனார் விஜயபாஸ்கர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை விசிக முன்வைத்துள்ளது.

அமைச்சர் ராஜீவின் மாமனார் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இடமாற்ற ஊழலின் பின்னணியில் அமைச்சரின் மாமனார் விஜயபாஸ்கர் இருப்பதாக விசிக குற்றஞ்சாட்டியுள்ளது. அதிகாரிகள் இடமாற்றத்தில் பெருந்தொகை கைமாறி உள்ளதாகவும் விசிக புகார் கூறியுள்ளது. முதலமைச்சர் விஜய் இதில் தலையிட்டு ஊழலற்ற ஆட்சி என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் எஸ்.எஸ்.பாலாஜி வலியுறுத்தியுள்ளார். அடுத்து நடக்கும் இடமாற்றத்திலும் அதிகார துஷ்பிரயோகம் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கூட்டணி அரசில் பங்கேற்றுள்ள விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி கூறியுள்ள இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.