ராமருக்கு எப்படி அனுமன் கிடைத்தாரோ...அதுபோல மு.க.ஸ்டாலினுக்கு சேகர்பாபு கிடைத்துள்ளார் - எ.வ.வேலு

 
ev velu

ராமருக்கு எப்படி அனுமன் கிடைத்தாரோ... அதுபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதமான தொண்டன் சேகர்பாபு கிடைத்திருக்கிறார் என அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார்.

சென்னையில் திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா-2025 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் சேகர் பாபுவை புகழ்ந்து தள்ளினார். தமிழ் கடவுள் முருகருக்கு வீரபாகு எப்படி கிடைத்தாரோ.... ராமருக்கு எப்படி அனுமன் கிடைத்தாரோ... அதுபோல என் அன்புத்தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அற்புதமான தொண்டன் சேகர்பாபு கிடைத்திருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தூக்கத்தில் கூட அமைச்சர் சேகர் பாபுவின் ஞாபகம் தான் எனவும் கூறினார்.