சென்னைக்கு புதிய சாலைகள், பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு அதிரடி அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று நெஞ்சாலைகள் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: பெருங்களத்தூர் முதல் மாடம்பாக்கம் சந்திப்பை இணைக்கும் வகையில் தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலையின் தொடர்ச்சியாக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் குறுக்கே ரூ.233 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும். சென்னை, பாடி அருகே “U’’ வடிவ சர்வீஸ் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவான்மியூர்-கொட்டிவாக்கம் வரை உள்ள சாலையை அகலப்படுப்படுத்த ரூ.95 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் கொரட்டூர் மற்றும் பாடி மார்க்கமாக செல்ல ”U” வடிவ சர்வீஸ் சாலை ரூ.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். திருவான்மியூர் முதல் கொட்டிவாக்கம் வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலை, ஆறு வழிச்சாலையாக ரூ.81 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்படும்
ராஜ கீழ்ப்பாக்கத்தில் இருந்து அகரம் தென் வழியாக பெருங்களத்தூர் மார்க்கத்தில் 1400மீ நீளத்திற்கு தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலை ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். ரயில்வே மேம்பாலத்தின் அடியில் கொரட்டூர் மற்றும் பாடி மார்க்கமாக செல்ல ”U” வடிவ சர்வீஸ் சாலை ரூ.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 220 கி.மீ மாநில நெடுஞ்சாலைகளை நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும் என கூறினார்.