தொழிற்சாலையை வானத்திலா கட்ட முடியும்?- அமைச்சர் எ.வ.வேலு

 
ev velu

விவசாயிகளை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுடான் அரசின் நோக்கம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

DMK Minister alleges misconduct by officials as Income Tax raids spots  linked to him - India Today

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் அலகு 3 விரிவாக்க பணிக்கு 3000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தினை கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டத்தினை கைவிட வலியுறுத்தி மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக்குடிசை நெடுங்கல் உள்ளிட்ட 9 ஊர் கிராம மக்கள் கடந்த 125 நாட்களாக  தனியார் நிலம் ஒன்றில் கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு போலீசார் கொட்டகையை அகற்றி போராட்டகாரர்களுக்கு ஆதரவாக இருந்த 20 நபர்களை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருபது நபர்களையும் வேலூர், மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட சிறைச்சாலையில் அடைத்தனர். தற்போது இருபது நபர்களில் போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ், உள்ளிட்ட ஏழு நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “விவசாயிகளை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுடான் அரசின் நோக்கம். ஆனால் தொழிற்சாலைகள் இருந்தால்தான் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க முடியும். தொழிற்சாலையை வானத்திலா கட்ட முடியும்? நிலத்தில்தான் கட்ட முடியும். சிலரின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரியிலிருந்து வந்தெல்லாம் ஒருவர் போராடியிருக்கிறார். 7 பேரின் குடும்பத்தார் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஒரு நல்ல தீர்வைக் கொடுக்க முதல்வரிடம் வேண்டுகோள் வைப்பேன்” எனக் கூறினார்.