பாஜகவினர் கடவுளின் உறவினர்போல காட்டிக்கொள்கின்றனர்- எ.வ.வேலு

 
ev velu

பாஜகவினர் கடவுளுக்கு உறவினர் போல் காட்டிகொள்கிறார்கள், மற்றவர்களை விரோதி போல் பேசி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். 

EV Velu

சென்னை தாம்பரம் அடுத்த படப்பையில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கும் விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துக்கொண்டு மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், இஸ்திரி பெட்டி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, “பா.ஜ.க வினர் கடவுளுக்கு உறவினர் போல் காட்டிகொள்கிறார்கள், மற்றவர்களை விரோதி போல் பேசி அரசியல் ஆதாயம்  பா.ஜ.க வினர் தேடுகிறார்கள், ஆனால் திராவிட மாடல் அரசு பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூன்றுபேரின் என்னங்களை செயல்படுத்தும் விதமாக உள்ளது,  கோவில் கட்ட அடித்தளம் முதல் கடவுள் சிலை சிற்பமாக வடிவமைத்து வைப்பது வரை ஓவ்வொரு கட்டத்திலும் பணி செய்வது யார், ஆனால்  அர்ச்சனை என்றால் யார் செய்கிறார்கள்? இதனை மாற்றியது திராவிட மாடல் அரசு. ஊர் ஊராக கோவில் கோவிலாக 200 கோவில்களில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என பணி ஆணையை வழங்கி அனைவரையும் அர்ச்சனை தட்டை தூக்க வைத்துள்ளது” என்றார்.