கடந்தாண்டு 60 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

 
duraimurugan

கடந்தாண்டு 89 தடுப்பணைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு 60 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 
 
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 06ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கிளம்பினார். உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவர் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார்.  தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாவாதம் நடைபெற்றது. 

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு 60 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். "கடந்தாண்டு 89 தடுப்பணைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு 60 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு அதிகமான தடுப்பணைகள் கட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும் கூறினார்.