ஜல்லிக்கட்டுக்கு பிரீமியர் லீக் ஆரம்பிக்கலாமே - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

 
trb raja


கிரிக்கெட்டுக்கு மட்டும் தான் லீக் இருக்க வேண்டுமா!  ஜல்லிக்கட்டுக்கும் பீரிமியர் லீக் ஆரம்பிக்கலாமே என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.  

 இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ ஜல்லிக்கட்டுத் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களான கபில்சிபல், ராகேஷ் திரிவேதி, முகுல் ரோகத்கி ஆகியோரை அமர்த்தி, தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை வலிமையான வாதங்களாக எடுத்துரைக்கச் செய்ததன் விளைவாக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது மாண்பமை உச்சநீதிமன்றம் !

jallikattu

2017 ஜனவரியில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தைத் தொடங்கிய நம் திராவிட நாயகர், அதற்கான சட்டப் போராட்டத்திலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக, சளைக்காமல் ஈடுபட்டு  இந்த மகத்தான வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இதுவரை ஜல்லிக்கட்டு நடைபெறாத மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் அதனை நடத்தி வருகிறது #திராவிட_மாடல் அரசு. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமை மீட்கப்பட்டு, இனி உலகளாவிய கவன ஈர்ப்புடன் தமிழ்நாடெங்கும் ஜல்லிக்கட்டு சிறக்கும். திராவிட நாயகரான முதலமைச்சரின் பெயர் உரக்க ஒலிக்கும். கிரிக்கெட்டுக்கு மட்டும் தான் லீக் இருக்க வேண்டுமா! ‘ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் ஆரம்பிக்கலாமே’” என்று குறிப்பிட்டுள்ளார்.