“FIR போட்டுட்டு பேரம் பேசுவதுதான் திமுகவின் டெக்னிக்; 30 வருஷமா இப்படிதான்..”- நிர்மல்குமார்

 
நிர்மல்குமார்

பாலியல் குற்றவாளியை திமுக தான் தப்பிக்கவிட்டதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “ஜெம் வீரமணி வழக்கை மூடவில்லையா..? முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு ஆங்கிலம் தெரியலனா கூட இருக்க நல்ல வழங்கறிஞர் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க.. இவர் சட்டத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் என்ன தான் செய்துகொண்டிருந்தார்..? எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒருத்தரையும் விட மாட்டோம். ஜெம் வீரமணி போல் எத்தனை வழக்குகளை தி.மு.க மூடியுள்ளது? தி.மு.க ஆட்சியில் குற்ற சம்பவங்கள் குறைவுனு சொன்ன லட்சணம் இது தானா? வீடியோ ஷேடோவாக இருப்பதாக சொன்ன முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும். 

FIR போட்டு அப்புறம் பேரம் பேசுவது தான் தி.மு.கவின் டெக்னிக். 30 ஆண்டுகளாக இதை தான் தி.மு.க செய்கிறது. திமுகவோட ஒரு பவர் சென்டர் தான் வீரமணியை காப்பாத்தி இருக்கிறது. பவர் சென்டரை அணுகித்தான் வீரமணி தப்பித்திருக்க முடியும். ரகுபதி வீரமணியை காப்பாற்றும் நோக்கில் பேசியுள்ளார். ஜெம் வீரமணியை பாதுகாக்க திமுக முயற்சி செய்கிறது. தனி குழு அமைத்து விரைவாக விசாரணை நடைபெறுகிறது. யாராக இருந்தாலும் வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது. ஜெம் வீரமணி வழக்கில் திமுக ஓவர் ரியாக்ட் செய்வது ஏன்? உங்கள் மீது தவறு உள்ளதா? ஜெம் வீரமணி வழக்கில் வீடியோ தெளிவாக இல்லை என்று ரகுபதிக்கு எப்படி தெரியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.