அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் செழியன்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என உயர்க்கல்வித்துறை அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் செழியன், நாட்டிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணைக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், உயர்கல்வித்துறை முழு ஒத்துழைப்பு தருகின்றன. எந்த ஒரு மாணவியும் பாதிக்கப்பட கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். படிப்பினையாக கொண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்.