நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மரணம் - அமைச்சர் சக்கரபாணி இரங்கல்

 
tn

'எதிர்நீச்சல்' புகழ் நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.  இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் , விமலின் புலிவால் ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.  சமீபத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சூழலில் நடிகர் மாரிமுத்து மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

tnt

இந்நிலையில் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தனது சமூகவலைத்தள பக்கத்தில், இயக்குநரும், நடிகருமான திரு. #மாரிமுத்து அவர்களது மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. மக்கள் மனங்களில் இடம்பிடித்த அவரது மறைவு கலையுலகிற்கு பேரிழப்பாகும்.


அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.