மரபை மீறி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிக்கையை வெளிமாநிலத்திற்கு எடுத்துச் சென்ற அமைச்சர்
Aug 1, 2026, 12:06 IST1785566171618
மரபை மீறி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிக்கையை வெளிமாநிலத்திற்கு அமைச்சர் வினோத் எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 - 2027 ஆண்டுக்காண வேளாண் தனி நிதி நிலை அறிக்கை, வரும் ஆக.6ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் வரைவு வேளாண் நிதி நிலை அறிக்கையை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வைத்து வேளாண் துறை அமைச்சர் வினோத் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனத்தில், ஏழுமலையானிடம் வேளாண் பட்ஜெட் நகலை வைத்து ஆசி பெற்றார். மரபை மீறி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிக்கையை வெளிமாநிலத்திற்கு அமைச்சர் வினோத் எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதால்.. திருப்பதி வெங்க பெருமாளிடம் ஆசிர்வாதம் பெற வந்தேன் என செய்தியாளர்களிடம் அமைச்சர் வினோத் கூறினார்.

