" 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது”- அமைச்சர் அருண்ராஜ்
அச்சம் தேவையில்லை, ஆனால் அலட்சியமும் கூடாது. வீடுகளில் தேங்கிய நீரை அகற்றுங்கள் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் டெங்கு நிலவரம்:
— Arunraaj TVK (@arunraajkg) September 20, 2026
தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது: 56,863 (2023) → 46,971 (2024) → 25,585 (2025) → 17,049 (2026, இதுவரை).
ஒவ்வொரு காய்ச்சல் பாதிப்பும் கண்காணிக்கப்படுகிறது; காய்ச்சல் முகாம்கள், கொசு ஒழிப்பு பணிகள் முழு வீச்சில்… pic.twitter.com/flMQRCggZG
இதுதொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் டெங்கு நிலவரம்:தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது: 56,863 (2023) → 46,971 (2024) → 25,585 (2025) → 17,049 (2026, இதுவரை).ஒவ்வொரு காய்ச்சல் பாதிப்பும் கண்காணிக்கப்படுகிறது; காய்ச்சல் முகாம்கள், கொசு ஒழிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.அச்சம் தேவையில்லை — ஆனால் அலட்சியமும் கூடாது. வீடுகளில் தேங்கிய நீரை அகற்றுங்கள்; காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகுங்கள். இணைந்து செயல்படுவோம், தமிழ்நாட்டை பாதுகாப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

