“IRS பணியை CM விஜயை நம்பி ராஜினாமா செய்தேன்” - அமைச்சர் அருண்ராஜ்

 
“IRS பணியை CM விஜயை நம்பி ராஜினாமா செய்தேன்” - அமைச்சர் அருண்ராஜ்

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா உயா்சிகிச்சை தரப்படும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவைப் விவாதத்தின்போது அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், “காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்குகிறது. இங்கு நான் உட்பட நிறைய பேருக்கு சுகர் இருக்கிறது. மயங்கி மயங்கி விழுகிறார்கள், பயங்கர வேதனையாக இருக்கிறது. சமாளிக்க முடியவில்லை. ஆகவே 70 வயதுக்கும் மேற்பட்ட 38 லட்சம் பேருக்கு வருமான உச்சவரம்பு இல்லாமல் கட்டணமில்லா சிகிச்சையளிக்கும் முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்படும். முதியோர் காப்பீட்டு திட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். 30 வயதை கடந்த அனைவருக்கும் முழு உடல் பாிசோதனை செய்யப்படும். முதற்கட்டமாக 2,500 செவிலியர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும். ரூ.51 கோடியில் நலம் - ஒருங்கிணைந்த கட்டணமில்லா உடல்நலப் பரிசோதனை கூடம் உருவாக்கப்படும். 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு ஒருமுறை 14 அடிப்படை பரிசோதனைகள் நடத்தப்படும்.

இருக்கவே இருக்கு பா.ஜ.க 'B' டீம்... சினிமா நடிகர் தானே அவருக்கு மக்களை பற்றி என்ன தெரியும் என்று பலரும் தவறான எண்ணத்தில் இருந்தார்கள்.. அவர் நல்லவருக்கு நல்லவர் வல்லவருக்கு எல்லாம் வல்லவர்.. இவரை நம்பி ராஜினாமா செய்யாமல் வேறு யாரை நம்பி ராஜினாமா செய்ய முடியும். ஓட்டுக்குப் பணம் கொடுக்கக் கூடாது. அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்ற முடிவில், எங்கள் தலைவர் கட்சி தொடங்குவதற்கு முன்னரே மிகவும் உறுதுணையாக இருந்தார்... நல்ல அரசியலுக்கு தமிழக மக்கள் என்றும் உறுதுணையாக நிற்பார்கள்.. தமிழ்நாட்டில் ஊழல் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்ற கருத்தியலை உருவாக்கியது தான் சென்ற அரை நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம்” என்றார்.