சமூக நீதி பேசும் DMK கடந்த ஆட்சியில் ஊழல் செய்தனர்- அமைச்சர் அருண்ராஜ்
மாநில மருத்துவக் கலந்தாய்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும், தகுதிப் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்படும் என தமிழக சுகாதார அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “2017இல் 66 சதவீதமாக இருந்த அரசு மருத்துவமனை பிரசவங்கள், தற்போது 51 சதவீதமாக குறைந்துள்ளது. இதை அதிகரிக்கவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் தொடர்ந்து தீவிரமாக எதிர்த்து வருகிறோம். நீதி கட்சி கொண்டு வந்த திட்டங்களுக்கு தான் எல்லா அரசும் ஸ்டிக்கர் ஒட்டி வருகிறோம். சென்ற ஆட்சியில் கொண்டு வந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நல்ல திட்டமாக இருந்தால் நிறுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. திட்டத்தின் பெயர் என்ன என்பதை விட திட்டங்கள் எந்த அளவிற்கு மக்களிடம் முழுமையாக சென்றடைகிறது என்பதுதான் முக்கியம்.
Party Fund அந்த முறையே இப்போது இல்லை. சமூகநீதி குறித்து பேசும் திமுகவினர் கடந்த ஆட்சியில் ஊழல் செய்தனர். திமுக முன்னால் அமைச்சர் ரகுபதியினால், மூன்று தனியார் கல்லூரிகள் டீம்ட் பல்கலைக்கழகங்களாக மாறுவதால், தமிழ்நாடு அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் 460-க்கும் மேற்பட்ட MBBS/BDS இடங்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் வரும் 35-க்கும் மேற்பட்ட இடங்கள் மாநில ஒதுக்கீட்டுப் பட்டியலில் இருந்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாநில மருத்துவக் கலந்தாய்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும், தகுதிப் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்படும்” என்றார்.

