நானும் 'ஜனநாயகன்' படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன்- அமைச்சர் அருண்ராஜ்
பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் வந்திருக்கிறது. கூடுதல் செய்தி என்னவென்றால், நானும் 'ஜனநாயகன்' படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “ஜனநாயகன் திட்டமிட்டபடி வெளியாகியிருந்தால், வேற லெவல் ஆக இருந்திருக்கும். ஜனநாயகன் பட ஷூட்டிங்கின் கடைசி நாள் எமோஷனலாக இருந்தது. நாளை ஜனநாயகன் படத்தின் முதல் காட்சியை பார்க்க முடியாத நிலை உள்ளது. வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதால் முதல் காட்சியை பார்க்க முடியாத நிலை ஜனநாயகன் படத்திற்கு மக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும். பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் வந்திருக்கிறது. கூடுதல் செய்தி என்னவென்றால், நானும் 'ஜனநாயகன்' படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். முதலமைச்சர் உத்தரவின்படி கிட்னி திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்னி திருட்டு வழக்கில் வெளிப்படையான முறையில் விசாரணை நடைபெறும்.. தவறு யார் செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே எக்ஸாம் (நீட்) நடத்துறதாலதான் நாடு முழுவதும் பல லட்சம் மாணவர்கள் எக்ஸாம் எழுதும்போது எங்கோ ஒரு இடத்தில் லீக் ஆகுறதுக்கான வாய்ப்பு அதிகமாகுது. ஒன்றிய அரசு தன் பிடிவாதமான போக்கை விட்டுவிட்டு, அந்தந்த மாநில அரசுகளுக்கே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தவோ அல்லது அட்மிஷன்ஸ் நடத்தவோ பொறுப்பை கொடுத்துட்டால் இந்த பிரச்சனை இருக்காது. ஒன்றிய அரசுக்கு ராணுவம், வெளியுறவு, ராணுவம், தொலைத்தொடர்பு, நிதிநிலை என்று மேனேஜ் பண்றதுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு. கல்வி, மருத்துவம் சார்ந்த விஷயங்களை மாநிலங்களுக்குக் கொடுத்துட்டால் இந்த பிரச்சனை வராது” என்றார்.

