அரசு ஒதுக்கீட்டில் 00 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது ஏன்? – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

 
as

திமுக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்காமல், கொடுத்த NOC-யை ரத்து செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு 600 மருத்துவ இடங்கள் பறிபோனதாக அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து பெற்றால் அவை இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டியது இல்லை. தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டையும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியதால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்த அனுமதிகோரி தனியார் மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாடு அரசை அணுகின. நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்த அனுமதிகோரிய தனியார் மருத்துவ கல்லூரிகளின் விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை. தாமதமாக என்.ஓ.சியை மறுத்த காரணத்தால் தனியார் மருத்துவ கல்லூரிகள் உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றன. அந்த மருத்துவ கல்லூரி தொடந்த வழக்கில் முந்தைய திமுக அரசு எந்த மேல்முறையீடும் செய்யவில்லை.

தொடர்ந்து 60 நாட்கள் வரை தமிழக அரசு மேல்முறையீடு செய்யாததால் அந்த கல்லூரிக்கு நிகர்நிலை பல்கலை கழக அந்தஸ்து கிடைத்துள்ளது.  இதேபோல் மற்றொரு கல்லூரிக்கு திமுக ஆட்சியில் 60 நாட்கள் வரை தடையில்லா சான்றிதழ் கொடுக்கவில்லை. 60 நாட்கள் வரை தடையில்லா சான்றிதழ் வழங்காததால் அந்த மருத்துவ கல்லூரிக்கும் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்துள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே 4 மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றுள்ளன. தமிழக அரசு என்.ஓ.சி. வழங்காததால் சில கல்லூரிகள் நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்றன. பெரம்பலூரின் 2 கல்லூரிகள் அரசின் ஒப்புதல் இன்றியே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாகின. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தமிழக அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை வசூலிக்க கட்டாயம் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம். நீதிமன்றத்திற்கு சென்று தடை பெறாவிட்டால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழ்நாட்டு கல்லூரிகள் எப்படி நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றப்படலாம்? நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டுள்ள 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் எந்த கட்சியை சேர்ந்தவை என அனைவருக்கும் தெரியும். சமூக நீதி பேசும் கட்சிகளை சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகள் தான் இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படுகின்றனர். சமூக நீதி பேசும் திமுக, அதிமுக இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்." என்றார்