"32 வாக்குறுதிகளில் 24 வாக்குறுதிகளை செயல்படுத்தியுள்ளோம்"- அன்பில் மகேஸ்
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ், “ஒப்பனை செய்தால் யாரும் ஹீரோவாகலாம், ஆனா யாராலும் கலைஞராக முடியாது. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் அறிவுசார்ந்த சமுதாயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றியுள்ளார். தேர்தல் வாக்குறுதியில் பள்ளிக் கல்வி சார்ந்து அறிவித்த 32 வாக்குறுதிகளில் 24 வாக்குறுதிகளை செயல்படுத்தியுள்ளோம். காகங்கள் அமரும் சிலைக்கு மத்தியில் மேகங்கள் அமரும் சிலையாக வள்ளுவர் சிலை உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் அரசு பொது நூலகங்களை பயன்படுத்தி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் மொத்தம் 1,293 இளைஞர்கள் அரசுப்பணிகளுக்கு தேர்வாகி இருக்கிறார்கள். கொரோனாவின்போது ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் செல்போனில் மூழ்கும் நிலை 54 சதவீத மாணவர்கள் செல்போன் பயன்பாட்டில் அடிமையாகியுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 6-8ம் வகுப்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன்' முனைப்பு இயக்கம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 2 கலைத் திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குக் 'கலைச்சிற்பி' என்ற தலைப்பில் ரூ.70 லட்சத்தில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும். 3 தொழிற்பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக ரூ.13 கோடியில் திறன் பயிற்சி அளிக்கப்படும். 4 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளுக்கும், 100% தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். 5 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக் கூடம் அமைக்கப்படும்” என்றார்.


