முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

 
anbil magesh

திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்தார்.  

mk stalin
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  @mkstalin அவர்கள் "திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்" எனும் மாபெரும் அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார். 


அறிவார்ந்த சமுதாயத்தின் அடையாளச் சின்னத்தை திருச்சியில் கட்டமைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு அமைச்சர் அண்ணன்  @KN_NEHRU அவர்கள், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின், இளைஞர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று பதிவிட்டுள்ளார்.