"மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது" - அமைச்சர் அன்பில் மகேஷ் வேதனை!!

 
anbil magesh

சாதி மோதல்களில் மாணவர்கள் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது  என்று அமைச்சர் அன்பில் மகேஷ்  வேதனை தெரிவித்துள்ளார். 

anbil-mahesh-3
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை மாடலாக கருதக்கூடாது.  தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு போக்குவரத்து துறையிடம் ஆலோசித்து வருகிறோம்.  மாணவர்கள் சாதி மோதல்கள் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.  இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார். 

anbil

தொடர்ந்து பேசிய அவர்,  "கடந்த காலத்தில் தென்மாவட்டங்களில் இதுபோன்ற சாதி மோதல்கள் இருந்து வந்தது.  தற்போது படிப்பறிவு அதிகரித்த நிலையில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது  இதை தடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது.  நெல்லையில் சாதி கயிறு கட்டி அதில் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடந்து வருகிறது.  அனைவருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  இதனால் மாணவர்கள் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் மாணவிகள் மோதிக்கொண்டது பள்ளிகள் இயங்காததால்  மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் உள்ள மன அழுத்தத்தின் காரணமாக மோதிக்கொண்டார்களா? ஹீரோயிசம் காட்ட மோதிக்கொண்டார்களா ? சமூகத்தில் நடந்த சில சம்பவங்களை பார்த்து இதுபோன்று கற்றுக் கொண்டார்களா? என கேள்வி எழுந்துள்ளது. எனவே மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சம்பவங்களை தடுக்க யூனிசெஃப் போன்ற அமைப்பு மூலம் 2.50 லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.