“பெற்றோர்களே கேள்வி கேளுங்கள்!”- அமைச்சர் அன்பில் மகேஷ்

 
அன்பில் மகேஷ் அன்பில் மகேஷ்

எங்களுக்கு இரு மொழிக் கொள்கைதான் தேவை என்று கூறும்போது மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் உங்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று கூறுவது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அப்படி கூறும் பாஜகவில் இருக்கக்கூடிய எல்.முருகன் எப்படி இது போன்ற கருத்துக்களை சொல்லலாம் உள்ளபடியே தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பதால் அவர் வருத்தம் தான் பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

anbil magesh

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பக்கம் நாங்கள் இருந்தாலும் நீங்கள் எங்கள் பக்கம் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக திமுக பக்கம் மக்கள் இருக்கின்றனர்‌. ஆசிரியர்களின் கோரிக்கை அன்பில் மகேஷின் கோரிக்கை என்பதை அறிந்தவர்கள் தான் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ளவர்கள். 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2457 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை வழங்கினோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அதிக வேகம் காட்ட கூடியவன் நான். தமிழ்நாட்டில் உள்ள 33 அமைச்சர்கள் கதவை தட்டும்போது நான் கதவு தட்டும் போது தான் முதலமைச்சரின் கதவு உடனடியாக திறக்கப்படுகிறது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை போல் ஆசிரியரை தூக்கி பிடிக்க கூடியவர் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

டெல்லியில் இருந்து கொண்டு நமது பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய முடியாது. இங்கு உள்ள பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் முடிவு செய்யலாம் என்பதற்காகத்தான் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்பட்டது. ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்ற வழியில் ஒன்றிய அரசு உள்ளே நுழைந்து விட முடியாது என்பதை உறுதி செய்யும் வகையிலும் ஒன்றிய அரசு இல்லை என்றாலும் ஒன் மேன் ஆர்மியாக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார் என்பதை நம்பும் வகையில் இந்த கூட்டம் இருக்கிறது என்று தெரிவித்தார். எல் முருகனுக்கு புரிதல் இல்லை. ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஒரு மிகப்பெரிய அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம். அதன் மிகப்பெரிய அறிவு விழா தான் நேற்று நடந்தது. ஒரே கல்வி ஆண்டில் மட்டும் 901 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்ட பிறகு ஏதோ ஒரு கல்வி நிறுவனம் என்று இல்லாமல் அந்தந்த மாவட்டத்தில் மாநிலங்களில் எதெல்லாம் உயர்ந்த கல்வி நிறுவனங்களாக கருதப்படுகிறதோ அந்த கல்வி நிறுவனங்களில் ஒரு ஆண்டில் செயற்கை நடைபெற்றுள்ளது. இங்கு உள்ள அனைவரும் இருமொழிக் கொள்கையில் படித்துவிட்டு தான் ஒவ்வொரு பணியில் இருக்கின்றோம். 

anbil


தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுத்த வரை இருமொழிக் கொள்கையில் தான் உறுதியாக இருக்கிறோம் என்பதை தெரிவித்துள்ளார். மனப்பாடம் செய்து பரீட்சை எழுதுவதை விட புரிதலோடு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் சார்ந்த நமது பிள்ளைகள் சிந்திக்க வேண்டும் என்னென்னவெல்லாம் நமக்கு தேவையோ அதை முழுமையாக சொல்லியுள்ளோம். பிள்ளைகள் மன உளைச்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்துள்ளோம். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் பொழுது இதை சார்ந்து விவாதத்திற்கு வர முடியாமல் நானும் கருத்து சொல்கின்றேன் என்ற விதத்தில் கருத்தைச் சொல்வது சரியாகவும் முறையாகவும் இருக்காது. எங்களுக்கு இரு மொழிக் கொள்கை போதும் மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்று கூறும் பொழுது இல்லை மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் உங்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று கூறுவது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அப்படி கூறும் பாஜகவில் இருக்கக்கூடிய எல் முருகன் எப்படி இது போன்ற கருத்துக்களை சொல்லலாம், உள்ளபடியே தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பதால் அவர் வருத்தம் தான் பட வேண்டும். மத்திய அரசு கல்வி நிதி அளிக்காதது குறித்து தமிழக பெற்றோர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.