பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்? நாளை அறிவிப்பு- அமைச்சர் அன்பில் மகேஷ்

 
anbil

பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

anbil magesh

பள்ளிகள் திறப்பு குறித்தும், வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இணையவழியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது, தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.மேலும் பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டனர்.

வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை அறிவிக்கப்படும். முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி முடிவெடுக்கப்படும்” என்றார்.

தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதியும், ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஜுன் மாதம் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படும் தேதியை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்திருந்தனர்.