ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்..

 
school

கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை முடிந்து   6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்பே அறிவித்திருந்தது.    இதற்கிடையில், தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும், வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்ததாலும்  பள்ளிகள்  திறப்பு ஒத்தி வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.  இதனால்  மாணவர்கள், பெற்றோர்கள்  எப்போது பள்ளிகள் திறக்கும் என குழப்பத்தில் இருந்தனர்.   

அன்பில்

இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.  6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும்,   1 முதல் 5ஆம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.  வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என தகவல் வெளியான நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.