அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளை பார்த்து கற்றுக் கொண்டு வளர வேண்டும் - அமைச்சர் அறிவுறுத்தல்!

 
anbil magesh

தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை பார்த்தும், அதுபோல அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளை பார்த்து கற்றுக் கொண்டு வளர்ச்சியடைய வேண்டும்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 33 நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா 
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பணி நியமன ஆணைகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். 

anbil

இந்த விழாவில் பேசிய அமைச்சர் அனிபில் மகேஷ்,  தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை பார்த்தும், அதுபோல அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளை பார்த்து கற்றுக் கொண்டு வளர்ச்சியடைய வேண்டும்.  தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியில் சிறுபான்மையினர் பள்ளிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. தனியார் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்தை தவிர்க்க கூடாது என்பதற்காகத்தான் தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கு புத்தாக்க வகுப்புகள் ஏற்படுத்தினோம். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது என கூறினார்.