தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

 
anbil magesh

சிறப்பாக உள்ள தமிழ்நாட்டின் கல்விமுறையை தேசிய கல்விக் கொள்கை சீர்குலைக்கிறது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழ்நாட்டின் கல்விமுறை ஏற்கனவே சிறந்த தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது. சிறப்பாக உள்ள தமிழ்நாட்டின் கல்விமுறையை தேசிய கல்விக் கொள்கை சீர்குலைக்கிறது. இருமொழி கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விமர்சிப்பது தவறான வழிநடத்துதலாகும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு பாடத்திட்டம் மிகச் சிறந்த பலனை அளித்துள்ளது. உடைந்ததை ஒட்ட வைக்க நினைக்காதீர்கள்.

நன்றாக செயல்படும் தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம். "தமிழ்நாட்டில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்ட கல்வியை தேர்வு செய்துள்ளனர். 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழியை படிக்கின்றனர். 3வது மொழியை படிக்க அவசியம் இருந்தால், ஏன் இவ்வளவு பேர் மாநில பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர்.