இன்னும் ஓரிரு நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு - அமைச்சர் தகவல்

 
anbil

அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சனிக்கிழமை பள்ளிகளை இயக்குவது தொடர்பாக செய்தியாளர்கள கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பொதுத்தேர்வு நடைபெறுவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம்.

அந்த வகையில் மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க உள்ளோம். அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும். இவ்வாறு கூறினார்.