தந்தை இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதிய மாணவி - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல்

 
anbil magesh

தஞ்சாவூர் மாவட்டம் திருவெறும்பூர் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, கல்விக்கு உதவி தொகையையும் வழங்கினார். 

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொய்கைக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஷாலினி, தன்னுடைய தந்தை மறைந்த சோகத்திற்கு இடையிலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை தவறாமல் எழுதி உள்ளார். இந்த நிலையில் அவரையும், அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மாணவி ஷாலினிக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினோம் என குறிப்பிட்டுள்ளார்.