“பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க..”- அமைச்சர் ஆனந்த் ஓபன் டாக்

 
“பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க..”- அமைச்சர் ஆனந்த் ஓபன் டாக்

இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.

செங்கல்பட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆனந்த், “மரகதம் குமரவேல் அக்காவுக்கு நாங்க பொட்டி கொடுத்தோமா..? பொட்டி வாங்கவே எங்க கிட்ட காசு இல்ல.. இதுல நாங்க எங்க பொட்டி குடுக்குறது..? உண்மையா சொல்றேன் சகோதரிக்கு நாங்க எதுவும் கொடுக்கவில்லை. மரகதம் குமரவேல் இங்கு வேட்பாளர் இல்லை. விஜய் தான் வேட்பாளர் என வாக்களிக்க வேண்டும், உங்கள் பிரச்சனை அனைத்தையும் விரைவில்தீர்த்துவைக்கிறோம். ஊழலை ஒழிக்க முடியுமான்னு எல்லாரும் கேட்டாங்க.. ஆனா இந்த 140 நாள்ல எங்கையுமே ஊழல் இல்ல. அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.

பல லட்சம் கோடி அளவுக்கு பட்ஜெட் போடும்போது, கொஞ்சமாவது காசு எடுக்கணும்னு யாருக்கா இருந்தாலும் தோன்றும்.. ஆனா முதலமைச்சர் விஜய்க்கு அந்த சிந்தனையை இருக்காது. நேரா தைரியமா தில்லா போய் ஓட்டு கேளுங்க, அடுத்த 20 வருஷத்துக்கு விஜய்தான் முதலமைச்சர். மைக்க புடிச்சி அத செய்யுற இத செய்யுறனு சொன்னிங்கல.. ஏன் இன்னும் செய்யல அப்படினு தைரியமா, தில்லா வந்து நீங்க கேட்கலாம்..?  ஒரு ஓட்டு போடுவதற்கு கூட 80,000 ரூபாய் செலவு செய்து வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள்.. அதற்கு காரணம் என்ன..? விஜய் மட்டும்தான்” என்றார்.