“கமிஷன் வேண்டாம், ஆனால் தரத்தில் குறைபாடு இருக்கக் கூடாது”- ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எச்சரிக்கை

 
“கமிஷன் வேண்டாம், ஆனால் தரத்தில் குறைபாடு இருக்கக் கூடாது”- ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எச்சரிக்கை

ஒப்பந்ததாரர்களை யாராவது லஞ்சம் கேட்டு அச்சுறுத்தினால் டோல் ஃப்ரீ நம்பரில் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.


சென்னை சேப்பாக்கத்தில், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது முந்தைய ஆட்சியில் பணி தொகையில் 20% லஞ்சம் ஆட்சியாளர்களுக்கு கொடுத்து வந்ததாக ஒப்பந்ததாரர்கள் கூறினார். ஒப்பந்ததாரர்கள் இனி லஞ்சமோ, கட்சி நிதியோ கொடுக்க தேவையில்லை என ஆதவ் அர்ஜூனா பேசியதாக தெரிகிறது. ஒப்பந்ததாரர்களை யாராவது லஞ்சம் கேட்டு அச்சுறுத்தினால் டோல் ஃப்ரீ நம்பரில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் டோல் ஃப்ரீ எண் அறிவிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை டெண்டரில் இனி வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படும் என்றும் ஆதவ் அர்ஜூனா கூறினார். லஞ்சம் கொடுக்க தேவையில்லை, ஆனால் ஒப்பந்ததாரர்கள் தாங்கள் எடுக்கும் பணிகள் தரமாகவும், குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவுறுத்தினார். பொதுப்பணித்துறை பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய சிங்கப்பூர் மற்றும் டெல்லியில் இருந்து நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தார். தரத்தில் குறைபாடு இருந்தால் முதலில் ஒரு எச்சரிக்கை விடுக்கப்படும், மீண்டும் அதே தவறு நடந்தால் டெண்டர் ரத்து செய்யப்படும் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.