காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

 
1

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் பேசியதாவது,

காவிரி நீர் உரிமையை பாதுகாக்க திமுக. அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் 30 ஆண்டுகளாக பேராடி வருகின்றனர். குடிநீருக்கு எனக் கூறி மேகதாது அணையை கட்டி, சட்ட சிக்கலை ஏற்படுத்தப் பார்க்கிறது கர்நாடகா. காவிரி நதிநீர் ஆணையம் மீது நாம் முழுமையாக நம்பிக்கை இழந்துள்ளோம். திட்ட அறிக்கை கொடுக்கச் சொல்லி கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.குடிநீர் தேவைக்காக என்று சொல்லி புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும். புதிய ஆணையம் அமைந்தால் தமிழகத்திற்கு கூடுதல் கால அவகாசம் கிடைக்கும் எனவும் கூறினார். 

 

நீர் பங்கீடுக்காக மேலாண்மை ஆணையம் இருக்கிறது; அணை கட்டும் பணி என்பதால் புதிய ஆணையம் தேவை. காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்தால் அது மேகதாது அணை கட்டுவதற்கு வழிவகுக்கும் என சட்ட நிபுணர்கள் கூறினர். சட்ட வல்லுனர்கள் கூறியபடியே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோருக்கிறோம்  என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.