"கரூர் பெருந்துயரின் நினைவுகளை உள்ளத்தில் ஏந்துவோம்"- ஆதவ் அர்ஜூனா

 
“அதிமுக தான் தவெக; இரட்டை இலை தான் விசில்”- ஆதவ் அர்ஜூனா

கரூரில் நம் குடும்பங்களை இழந்த துயரின் நினைவு நாள் இன்று என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.


இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நம் குடும்பங்களை இழந்த துயரின் நினைவு நாள் இன்று. அன்பையும் பாசத்தையும் தவிர வேறொன்றும் அறியாத நம் உறவுகளைப் பிரிந்த வலி, வாழ்க்கை முழுவதும் தீராது. நம் இதய உறவுகளை இழந்து, வாழ்நாள் காணாத வேதனையையும் தவிப்பையும் சுமந்துகொண்டிருக்கிறோம். நமது அன்பு சொந்தங்களுக்கு ஆதரவாகவும் அரணாகவும் எப்போதும் நாம் இருப்போம். கரூர் பெருந்துயரின் நினைவுகளை உள்ளத்தில் ஏந்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.