ரேசன் கடையில் அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம் என் குடும்பம் - ஆதவ் அர்ஜுனா

 
“10 வருஷ கூட்டணி பத்தே நாட்களில் எங்கள் தலைவரை நோக்கி வந்தார்கள்”- ஆதவ் அர்ஜூனா

தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் போது பேசிய  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா  பொதுமக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகளில் உயர்தரமான அரிசி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ரேசன் அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம் என் குடும்பம். எங்கள் குடும்பம் சாப்பிட்ட ரேசன் அரிசி பெரிதாக இருக்கும். பெரும்பாலான எம்எல்ஏக்கள் ரேசன் அரிசி சாப்பிடுவதில்லை. விவசாயிகளின் கோரிக்கையின் படி தான் சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் தரமான அரிசி கிடைக்க சன்ன ரக நெல் உற்பத்திக்கு ஊக்கம் அதிகம் கொடுக்கப்படுகிறது. ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார். ரேசன் அரிசி 90 சதவீதம் மக்கள் சாப்பிடுவதில்லை. ரேசன் அரிசி பெரும்பாலும் இட்லி மாவுக்கு தான் பயன்படுகிறது.

அரசு வழங்கும் உதவிகளை 'இலவசம்' என்று கூறுவது தவறு. இலவச மருத்துவம், இலவசக் கல்வி, இலவச அரிசி என அனைத்தும் இருக்கின்றன. ஆனால், அமைச்சர்களோ சட்டமன்ற உறுப்பினர்களோ எப்போதாவது அரசு மருத்துவமனைக்கோ அரசுப் பள்ளிகளுக்கோ சென்று பயன்படுத்துவது உண்டா? இலவசம் என்பது கருணை அடிப்படையில் வழங்கப்படுவதல்ல. அது மக்களின் தகுதி சார்ந்த உரிமை! ஏழை எளிய மக்களின் உரிமைகள் எந்த ஊழலும் இல்லாமல், நேர்மையான முறையில் தரமானதாகச் சென்றடைய வேண்டும்” என்றார்.