100 நாட்களில் எந்த துறையிலும் ஊழல் இல்லை: ஆதவ் அர்ஜூனா

 
100 நாட்களில் எந்த துறையிலும் ஊழல் இல்லை: ஆதவ் அர்ஜூனா

ஜெம் வீரமணி மீது குற்றச்சாட்டில் FIR போட்டு வழக்கை முடிக்க முயற்சித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

மதுராந்தகம் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “2025 ஆம் ஆண்டு அக்டோபரில் ஜெம் வீரமணி மீது திமுக ஆட்சியில் வழக்கு பதியப்பட்டுள்ளது. வீரமணி மீதான வழக்கை முடிக்க ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கு குறித்து நானும், நிர்மல்குமாரும் பேச தடை விதிக்க வேண்டுமென திமுக சொல்கிறது. ஜெம் வீரமணி மீது குற்றச்சாட்டில் FIR போட்டு வழக்கை முடிக்க முயற்சித்தனர். ஆனால் விஜய் ஆட்சியில், ஒரு போலீஸ் கமிஷனரை தூக்கி அடித்திருக்கிறார். ஏன் திமுக ஆட்சியில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது என்பதற்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். அதன் பின்னணியில் அழுத்தம் கொடுத்தது யார்? பின்னணியில் நடந்த பணபரிவர்த்தனை யாருக்கு சென்றது?

கலைஞர், அண்ணாவின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் திமுக ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. ஆனால், நம்முடைய தலைவர் சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றினர். விஜயின் பரப்புரையால் 15 திமுக முன்னாள் அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். 15 அமைச்சர்கள் Out. திமுக தலைவர், திமுக பொதுச்செயலாளர், திமுக பொருளாளர் மகன் தோற்ற வரலாறு இதுவரை இல்லை. ஆனால் சாமானியரை நிறுத்தி வெற்றி பெற வைத்தவர் நம் முதல்வர். ஸ்டாலின் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. 100 நாட்களில் எந்த துறையிலும் ஊழல் இல்லை” என்றார்.