“கம்யூனிஸ்டுகள் மனதளவில் தவெகவுடன் கூட்டணி”- ஆதவ் அர்ஜூனா

 
ச்

கம்யூனிஸ்டுகள் மனதளவில் த.வெ.க கூட்டணியுடன் இருப்பார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

தவெக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “மதச்சார்பின்மையும் சமூகநீதியும் எங்கு உள்ளதோ அங்கு தான் தமிழ்நாட்டில் வெற்றி இருக்கும். அதனால் தான் கூட்டணி பெயரிலும் மதச்சார்பின்மை, சமூகநீதியுடன் வெற்றி உள்ளது. இந்த இரு கொள்கைகள் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும். அந்த வெற்றி மக்களுக்கானதாக இருக்கும். கம்யூனிஸ்ட் தோழர்கள் தவெகவுடன் தான் உள்ளனர்.. த.வெ.க அரசுக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு தொடர்கிறது.. கம்யூனிஸ்டுகள் மனதளவில் தவெக கூட்டணியுடன் இருப்பார்கள். தமிழ்நாட்டில் தேர்தலுக்கு அப்பாற்பட்டு கொள்கை கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணி தேர்தலுக்காக உருவானது இல்லை. வட இந்தியாவில் இருந்து மட்டுமே பிரதமர் உருவாகிறார்கள். தமிழகத்தில் இருந்தோ அல்லது தென் இந்தியாவில் இருந்தோ பிரதமர் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தின் எதிர்கால கனவு” என்றார்.