நாளை வழக்கம் போல் மினி பஸ்கள் வழக்கம் போல் இயங்கும்..!!
Sep 29, 2026, 13:03 IST1790667187634
மினி பஸ்கள் அனைத்தும் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் தனியார் பஸ்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் நாளை (புதன்கிழமை) வரை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கும் மினி பஸ்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தமிழ்நாடு மினி பஸ் உரிமையாளர்கள் சம்மேளன மாநில உயர்மட்டக்குழுவின் ஆலோசனை முடிவின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மினி பஸ்களும் வழக்கம்போல் தொடர்ந்து இயங்கும்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் நடக்கவிருக்கும் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தத்தில் மினி பஸ்கள் கலந்துகொள்ளாது. அனைத்து மினி பஸ்களும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

