திமுக மாநாட்டிற்கு சென்ற மினி வேன் கவிழ்ந்து பெரும் விபத்து- 12 பேர் காயம்

 
s

திருச்சி தி.மு.க மாநாட்டிற்கு செல்லும் போது மினி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தி.மு.க தொண்டர்கள் 12 பேர் காயம் அடைந்தனர்.

Mini van heading to DMK convention overturns in major accident - 12 injured

திருச்சி மாவட்டம் சிறுகனூரில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, அக்கட்சியின் பலத்தை பறைசாற்றும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

இந்நிலையில் திருச்சி  திமுக மாநில மாநாட்டிற்குச் சென்ற தொண்டர்களின் வேன், தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த கோர விபத்தில் 20-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் காயமடைந்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.