அரசு அறிவித்த ₹3 உயர்வு போதாது: பாலை வீதிகளில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

 
1

தமிழக அரசு சட்டசபையில் அண்மையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி அறிவித்தது. தமிழக அரசு அறிவித்துள்ள இந்தக் கொள்முதல் விலை போதாது மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டையில் பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை மிகவும் குறைவு எனவும், இது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், எனவே அரசு லிட்டருக்கு பத்து ரூபாய் என பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு தங்களது பாலை கொடுக்காமல் புறக்கணித்து பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி வடக்காடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பு, பாலை கீழே ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம், பணிக்கம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன் கூடிய விவசாயிகள், ஆவினுக்கு பால் ஊற்றுவதை புறக்கணித்து, சொசைட்டி முன்பாகவே தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்கினர்.