கிருஷ்ணகிரியில் லேசான நிலஅதிர்வு-ரிக்டர் அளவில் 3ஆக பதிவு

 
Earthquake

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. இரவு 7.52 மணிக்கு பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்துல் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். தமிழ்நாடு- கர்நாடக எல்லை அருகே நில அதிர்வு பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. தேன்கனிக்கோட்டை- ஓசூர் இடையே பெட்டமுகிலாளம் அடுத்த கண்ணகி கோவில் அருகே நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் ரிக்டர் அளவில் 3ஆக பதிவானதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. நில அதிர்வு குறித்து மக்கள் தேவையற்ற அச்சமோ, பீதியோ அடைய வேண்டாம், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இதேபோல் கர்நாடகாவிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.