சீமான் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு..!

 
1

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.எந்த சின்னம் கொடுத்தாலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். சின்னத்தை வைத்து எங்கள் வளா்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசும் தோ்தல் ஆணையமும் இணைந்து செயல்படுகின்றன என குற்றம் சாட்டினார்..  

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த பிஏபி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், நாதகவுக்கு புதிய சின்னம் வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் சீமானின் கட்சிக்கு தற்போது மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.