தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்

 
சொந்த ஊர்

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் திருப்பூரில் உள்ள வெளிமாவட்ட தொழிலாளர்கள் இன்று சொந்த ஊர் செல்வதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் அதிக அளவு கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தங்களது சொந்த ஊருக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களில் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொழிலாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக பீகார் ஒரிசா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. கேரள மாநிலம் அலப்பியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் ரயில் வர உள்ளதால் ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வருகிறது. திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.