புலம்பெயர் தொழிலாளர் வதந்தி- கண்காணிக்க குழு: டிஜிபி உத்தரவு

 
dgp

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி தொடர்பான விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

north indian

கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ பரவி வருகிறது. இது ஒருசிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த வீடியோ உண்மை கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திருப்பூர், மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் பணிபுரிந்துவரும் வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். அவர்கள் அதிக அளவில் தமிழகத்தை விட்டு வெளியேறி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். 

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள், 

1. டி.ஆர்.அவினாஷ் குமார், ஐபிஎஸ்., ஐஜிபி, நிர்வாகம். (94421-62456)

2. திரு.அபிஷேக் தீட்சித், ஐபிஎஸ்., டிஐஜி, தலைமையகம்.(89396 -77577)

3. டிஆர்.ஹர்ஷ் சிங், ஐபிஎஸ்., டிசிபி, போக்குவரத்து (சென்னை வடக்கு) (94981-49999)

4. Tr. ஆதர்ஷ் பச்சேரா, IPS., SP (IPREC) (88262-49399)

5. டிஎம்டி. டி.சண்முக பிரியா, எஸ்பி (என்ஆர்ஐ செல்) (94431-22666)