மதிய உணவு - செலவின தொகையை உயர்த்தி முதல்வர் ஆணை

 
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் :

2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவுத் திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவோடு காலை உணவும் கூடுதலாக வழங்க வேண்டும்:  புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை | New Education Policy: Breakfast for  school ...

மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.4,114 கோடி கூடுதல் செலவின்ம ஏற்படும். இதன்மூலம் குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளார்கள்.

அதன்படி, 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.  காய்கறிகளுக்கான செலவினம் ரூ.1.33, உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கு 46 காசுகள், எரிப்பொருளுக்கான செலவினம் 60 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.