எம்ஜிஆர் 106 வது பிறந்தநாள் - பிரேமலதா விஜயகாந்த் மரியாதை!!

 
tn

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்ஜிஆர் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு  அவரது திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

’M.G.R சிலைக்கு காவித் துண்டு’ ஓ.பன்னிர்செல்வம் கண்டிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  தமிழ் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர் எம்ஜிஆர்.  அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கி சாதனை படைத்தவர். 
 

tn

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்ஜிஆர் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில் தேமுதிக கழக துணை செயலாளர் பார்த்தசாரதி,உயர் மட்ட குழு உறுப்பினர கிருஷ்ண மூர்த்தி,தொழிற்சங்க பேரவைச் செயலாளர் காளிராஜன்,மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள், தினகர், மாறன், வேல்முருகன், ஆனந்தன்,பிரபாகர்,மாநில நிர்வாகிகள், மற்றும் கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.