எம்ஜிஆரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் - ஓபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 
ops

அஇஅதிமுக நிறுவனர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின்  106-ஆம் ஆண்டு பிறந்த நாளினை  முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ஓபிஎஸ் மரியாதை செலுத்துகிறார்.

ops

இதுக்குறித்து வெளியாகியுள்ள  அறிக்கையில், "ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓர் அரசியல்வாதி இருக்கிறான். ஆனால் அரசியல்வாதிகளுக்குள் மனிதப் புனிதராகத் திகழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். பலர் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். சிலர் வரலாறாகவே இருந்திருக்கிறார்கள். அந்தச் சிலருள் ஒருவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். வாழ்நாளெல்லாம் மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். "வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்” என்று பாடிய புரட்சித் தலைவர் அவர்கள், மக்களைப் பார்த்து, “அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்” என்று பாடி, மக்களின் அன்பைப் பெற்றவர். மக்களின் அன்பைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த புரட்சித் தலைவர் அவர்கள், "வலிமையுள்ளவன் வைச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி - பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி” என்ற பாடல் வரிகளுக்கேற்ப பத்தாண்டுகளுக்கும் மேல் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை நடத்திய பெருமைக்குரியவர்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மண்ணைவிட்டு விண்ணுலகுக்கு செல்லும்போது, “தங்கத்தை மண்ணில் இருந்து தோண்டி எடுப்பார்கள். இப்போது மண்ணைத் தோண்டி தங்கத்தைப்புதைக்கிறார்கள்” என்ற வார்த்தைகள் வானொலியில் ஒலிபரப்பப்பட்டு தமிழ்நாட்டு மக்களை கண் கலங்க வைத்தன. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்து 35 ஆண்டுகள் ஆகியும் 'எம்.ஜி.ஆர்.' என்கிற மூன்றெழுத்திற்கும், அவர் அறிமுகப்படுத்திய வெற்றிச் சின்னமாம் 'இரட்டை இலை-க்கும் மக்களிடைய ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்றால், அந்த அளவுக்கு மக்களின் அன்பைப் பெற்றிருக்கிறார் புரட்சித் தலைவர் அவர்கள்.

’M.G.R சிலைக்கு காவித் துண்டு’ ஓ.பன்னிர்செல்வம் கண்டிப்பு

காலத்தை வென்று, காவியமாகி, மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் வீற்றுள்ள வெற்றித் திருமகனார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவர் “பாரத ரத்னா" எம்.ஜி.ஆர். அவர்களின் 106-ஆம் ஆண்டு பிறந்த நாளான 17-01-2023 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10-00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள்.

Ops

இதன் தொடர்ச்சியாக, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள். மேற்படி நிகழ்ச்சியில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்ந்த இடமான ராமாபுரம் தோட்டத்தில் நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றை, சிறப்பு இயல்புகளை, வாரி வழங்கும் தன்மையை, மனிதாபிமானச் செயல்களை புத்தகமாக எழுதிய ஆசிரியர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கௌரவப்படுத்துவார்கள். இதனைத் தொடர்ந்து, நடைபெறும் சமபந்தி விருந்திலும் பங்கேற்க உள்ளார்கள். மேற்படி நிகழ்ச்சியிலும், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத் தொண்டர்கள் கலந்து கொள்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள் மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலக் கழக நிர்வாகிகள் அனைவரும் 17-01-2023 அன்று தங்கள் பகுதிகளில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப் படங்களை ஆங்காங்கே வைத்து மாலை அணிவித்தும், மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.