முழு கொள்ளவை எட்டும் மேட்டூர் அணை
மேட்டூர் அணை நடைபாண்டில் மூன்றாவது முறையாக நிரம்ப உள்ள நிலையில், இன்று காலை நிறுவனத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை இன்னும் சற்று நேரத்தில் நிரம்பியுள்ள நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119. 97 அடியாக உள்ளது மேட்டூர் அணையின் நீர்வரத்து 2875 படியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மாலைக்குள் மேட்டூர் அணை கொள்ளளவான 120 அடியை விட்டு என திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் தெரிவித்தார்.
ஆய்வின்போது அணையின் உறுதி தன்மையை குறித்தும் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய நிறுவனத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார், பாசனத்திற்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்கப்படும் டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்து வரும் நிலையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்படும் பொழுது திறக்கப்படும் என்றும் கூறினார். ஒவ்வொரு நீர் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த பின் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்